அரசு பஸ் பழுதானதால் பயணிகள் மறியல்


அரசு பஸ் பழுதானதால் பயணிகள் மறியல்
x

அரசு பஸ் பழுதானதால் பயணிகள் மறியல்

மதுரை

வாடிப்பட்டி,

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்திலிருந்து திருப்பூருக்கு நேற்று மாலை 6.30 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சை ஓட்டுனர் லட்சுமணன் ஓட்டி வந்தார். அதில் நடத்துனராக சுரேஷ் இருந்தார். அந்த பஸ்சில் 70 பயணிகள் பயணம் செய்தனர். இந்தநிலையில் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த பஸ் 7 மணிஅளவில் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா என்ற இடத்தில் வந்தபோது திடீரென்று பழுதானது. அதனால் நடத்துனர் சுரேஷ் பின்னால் வந்த அரசு பஸ்களை நிறுத்தி தனது பஸ்சில் வந்த பயணிகளை ஏற்றி விட முயற்சி செய்தார்.ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் தங்களுக்கு தனி பஸ் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்து அடுத்தடுத்து வந்த திருப்பூர் அரசு பஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story