உத்தங்குடியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்


உத்தங்குடியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்
x

உத்தங்குடியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை

மதுரை,

மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் பரசுராம்பட்டி மண்டலம் பொதுக்குழு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் ஆலோசனையின் படி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். சிறுபான்மை அணியின் மாநில பொதுச்செயலாளர் கல்வாரி தியாகராஜன், அமைப்பு சாரா அணியின் மாநில செயலாளர் சந்தோஷ் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் தர்மலிங்கம், மாவட்ட செயலாளர் மகேந்திர பிரபு ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உத்தங்குடி பகுதியில் பள்ளிகள் திறக்கும் முன் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும், மேலும் சாலையின் நடுவே குப்பைத்தொட்டிகளை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், சிற் சிறு விபத்தும் ஏற்படுகிறது. எனவே அவற்றை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி, ஓரமாக இடையூறு இல்லாத இடங்களில் வைக்க வேண்டும், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் இணைப்பு வழங்கப்படாத வீடுகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும், பரசுரம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வக்கீல் அணி கிருஷ்ண தாஸ், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செல்வ மாணிக்கம், நிர்வாகிகள் ஜி.பி. பிரபு, கோகிலா தேவி, சுபச்செல்வம், பரமேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.


Related Tags :
Next Story