நாகை ெரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி


நாகை ெரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி
x

நாகை ெரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி

நாகப்பட்டினம்

நாகை ெரயில் நிலையத்தில் சர்வர் கோளாறு காரணமாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஆன்மிக சுற்றுலா தலம்

நாகை மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் ஆகியவை அமைந்த மும்மதத்தினரும் வழிபட்டு செல்லக்கூடிய ஆன்மிக சுற்றுலா தலமாக உள்ளது. இதனால் வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் நாகை மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் ெரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் நாகை மாவட்டத்திற்கு ெரயில் சேவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எப்போது பார்த்தாலும் ெரயில் நிலையம் பரபரப்பாக காணப்படும்.

முன்பதிவு செய்ய முடியாமல் அவதி

நாகை ெரயில் நிலையத்தில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்வதற்காக காலை முதலே காத்திருந்தனர். ஆனால் காலை 8 மணியிலிருந்து ெரயில் நிலையத்தில் சர்வரில் கோளாறு ஏற்பட்டது. இதனால் முன்பதிவு செய்ய முடியாமல் ஊழியர்கள் அவதியடைந்தனர். தொடர்ந்து 11 மணி அளவில் தட்கல் டிக்கெட் எடுப்பதற்காக வந்தவர்களும் நீண்ட நேரம் காத்திருந்ததால் அதிருப்தி அடைந்தனர்.

ஏமாற்றம்

இதனால் டிக்கெட் வழங்கும் கவுண்டரில் உள்ள பணியாளர்கள் சிஸ்டம் பெயிலியர் என எழுதப்பட்ட அறிவிப்பு அட்டையை அலுவலகத்துக்கு முன்பு வைத்தனர். தொடர்ந்து அருகில் உள்ள நாகூர் ெரயில் நிலையத்துக்கு சென்று அங்கு டிக்கெட் பதிவு செய்யும்படி பயணிகளிடம் தெரிவித்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து ஆத்திரமடைந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

சுற்றுலாத்தலங்களின் மைய பகுதியில் இருக்கும் நாகை ெரயில் நிலையத்தில் அடிக்கடி இவ்வாறு சர்வ கோளாறு ஏற்படுவது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுகுறித்து ெரயில்வே துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து தொடர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story