பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க வேண்டும்
திருப்பத்தூரில் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க வேண்டும் என மத்திய மந்திரியிடம், அண்ணாதுரை எம்.பி. மனு கொடுத்துள்ளார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்.பி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்து உள்ளார்.
அதில் தமிழ்நாட்டில் உள்ள திருப்பத்தூரில் (மாவட்டத் தலைமையகம்) பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க வேண்டும். திருப்பத்தூர் மற்றும் மாவட்டத்தில் வசிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்காகவும் சுற்றுலாவுக்கும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். திருப்பத்தூரில் பாஸ்போர்ட் அலுவலகம் இல்லை. இதனால் பாஸ்போர்ட் தொடர்பான பணிகளை மேற்கொள்வதில் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
எனவே திருப்பத்தூரில் பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டால், வெளிநாடுகளுக்கு செல்ல விருப்பமுள்ளவர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, தேவையான உதவிகளை பெறவும் வழிவகை செய்யும். அதனால் திருப்பத்தூரில் பாஸ்போர்ட் அலுவலகத்தை விரைவில் திறக்க தேவையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட மந்திரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.