ஆரல்வாய்மொழி அருகே இளம்பெண்ணிடம் குழந்தை பெற்றுத்தர கேட்ட போதகர் கைது


ஆரல்வாய்மொழி அருகே இளம்பெண்ணிடம் குழந்தை பெற்றுத்தர கேட்ட போதகர் கைது
x

ஆரல்வாய்மொழி அருகே இளம்பெண்ணிடம் குழந்தை பெற்றுத்தர கேட்ட போதகரை போலீசார் கைது செய்தனர்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருேக இளம்பெண்ணிடம் குழந்தை பெற்றுத்தர கேட்ட போதகரை போலீசார் கைது செய்தனர்.

போதகர்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள சவேரியார் சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் தயின் ராஜா இன்னாசிமுத்து (வயது40). போதகராக இவர் தற்போது ஆரல்வாய்மொழி அருகே நெசவாளர்காலனி பகுதியில் வசித்து வருகிறார். மேலும் நாகர்கோவில் பகுதியில் மத போதனையில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் கணவர் பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகள் உண்டு.

ஆபாசமாக பேசினார்

சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்த போது தயின் ராஜா இன்னாசிமுத்து சென்றுள்ளார். அவர் இளம்பெண்ணிடம், 'உன் அம்மாவால் இனி குழந்தை பெற முடியாது. நீ எனக்கு ஒரு குழந்தை பெற்றுக்கொடு' என்று ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க நிலையிலும் பேசியுள்ளார். இதைகேட்ட இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்பு தயின் ராஜா இன்னாசிமுத்து அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து அந்த இளம்பெண் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போதகர் தயின் ராஜா இன்னாசிமுத்துவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போதகருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள்.

இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி குழந்தை பெற்றுத்தர கேட்ட போதகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story