பசும்பொன்னில் டி.ஐ.ஜி. ஆய்வு
பசும்பொன்னில் டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம்
கமுதி
கமுதி அடுத்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அடுத்த மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் அரசு விழாவாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் முதன் முதலாக குரு பூஜை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதால் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை பசும்பொன்னில் முன்னேற்பாடுகள் நடவடிக்கை குறித்த ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்கள் வந்து செல்லும் வழித்தடம், முக்கிய பிரமுகர்கள் வரும் நுழைவு வாயில், அடிப்படை வசதிகள் குறித்து பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் அம்மாள், தங்கவேலு, ராஜா உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கமுதி துணை சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story