போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி
தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையம்
தலைஞாயிறு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தலைஞாயிறு பேரூராட்சியில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் உள்ளது.
இந்த சுகாதார நிலையத்திற்கு தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் அருகில் உள்ள காடந்தேத்தி, மணக்குடி, வாட்டாகுடி, அவரிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த ஆஸ்பத்திரியில் ஒரே ஒரு டாக்டர் மட்டும் பணியில் இருக்கிறார். இதனால் சிசிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.
உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம்
மேலும் சிகிச்சை பெறுவதற்கு நோயாளிகளை 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினத்திற்கும், 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டிக்கும் அழைத்து செல்லும் நிலை உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு அனுப்பியும், பொதுமக்கள் போராட்டம் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக போதிய டாக்டர்களை நியமிக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.