பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் பவுர்ணமி கொடைவிழா


பதினெட்டாம்படி கருப்பணசாமி  கோவில் பவுர்ணமி கொடைவிழா
x

விளாத்திகுளம் அருகே பதினெட்டாம்படிகருப்பணசாமி கோவில் பவுர்ணமி கொடைவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தம் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் ஆடி மாத புவுர்ணமி கொடை விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வந்து பின் பால், சந்தனம் உள்ளிட்டவைகளை கொண்டு பதினெட்டாம்படி கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ அலங்கார பூஜையும், தீபாராதனையும் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுவாமி அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொல்லுதல் நிகழ்ச்சியும், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து கோவிலில் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story