பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

சாயல்குடி அருகே பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி வேலாயுதபுரம் கிராமத்தில் சத்திரிய இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர், பத்திரகாளியம்மன், உஜ்ஜயினி மாகாளியம்மன், சீனிவாச பெருமாள், சுடலை மாடன், பைரவர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமை தாங்கினார். கடலாடி ஒன்றிய துணை சேர்மன் ஆத்தி வட்டார நாடார் உறவின்முறை சங்கத்தலைவர் செண்பக பாண்டியன் வேலாயுதபுரம் கிராம தலைவர் சரவண பழனி முருகன் நரிப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், ஒன்றிய கவுன்சிலர் முருகன் சிவகங்கை மாவட்ட தலைவர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மத்திய கூடுதல் வக்கீல் ராமமூர்த்தி நாடார் மகாஜன சங்கபொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பத்ரகாளி அம்மனுக்கு விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை, இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடு மேற்கொள்ளப்பட்டு கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது


Related Tags :
Next Story