சிவகிரி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம்


சிவகிரி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம்
x

சிவகிரி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே ராயகிரி நகர பஞ்சாயத்தைச் சேர்ந்த வடுகப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியின் கீழ்புறம் மந்தை புறம்போக்கு இடத்தில் அமைந்துள்ள எரிமேடையால் இப்பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை சார்ந்த மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கும் வகையிலும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் சுமூக முடிவு மேற்கொள்வதற்காகவும் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிவகிரி தாசில்தார் செல்வக்குமார் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சிவகிரி மண்டல துணை தாசில்தார் மைதீன் பாட்ஷா, வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராமலட்சுமி உள்பட இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இதற்கு முன்பு ஏற்கனவே பயன்படுத்தி வந்த பழைய எரிமேடையை ராயகிரி நகர பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் சீரமைத்த பின்னர், தற்போதைய எரிமேடையை அப்பறப்படுத்திக் கொள்வது என தெரிவிக்கப்பட்டதை இரு சமூகத்தினரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story