டாஸ்மாக் கடைகளை அகற்றுவது குறித்த சமாதான கூட்டம்
டாஸ்மாக் கடைகளை அகற்றுவது குறித்த சமாதான கூட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி-கறம்பக்குடி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய கோரி சமூக ஆர்வலர் முருகேசன் உள்ளிட்டவர்கள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் வரை நடைபயணம் செல்ல இருந்தனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் இதற்கான சமாதான கூட்டம் தாசில்தார் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் புதுக்கோட்டை (டாஸ்மாக் லிட்) உதவி மேலாளர் கருப்பையா, துணை தாசில்தார் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு, கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ், சமூக ஆர்வலர் முருகேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டாஸ்மாக் உதவி ஆய்வாளர், ஆலங்குடியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மாற்றிடத்தில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு விதிகளின்படி வேறு இடத்திற்கு மாற்றவோ அல்லது மேற்படி கடையை மூடவோ ஒரு மாத காலத்திற்கு பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு போராட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டது.