சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்
சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளத்தில் இருந்து கோவை, சென்னை செல்லும் விரைவு பஸ்கள், ெகாராேனா காலத்திற்கு பிறகு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். நிறுத்தப்பட்ட அரசு விரைவு பஸ்களை மீண்டும் இயக்கக்கோரி நாளை (திங்கட்கிழமை) வர்த்தக சங்கம் சார்பில் கடைகளை அடைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தங்கையா தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் சாத்தான்குளம் வர்த்தக சங்கத் தலைவர் சசிகரன், செயலர் மதுரம் செல்வராஜ், துணைத் தலைவர் கண்ணன், நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் முத்துராமலிங்கம், மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில், இன்னும் ஒரு வாரத்தில் சாத்தான்குளம் - கோவைக்கு விரைவு பஸ் இயக்கப்படும் எனவும், நெல்லையில் இருந்து சாத்தான்குளத்திற்கு வரும் கடைசி பஸ்சை பழைய பஸ்நிலையம் வரை வந்து பயணிகளை இறக்கி விட்டு செல்வதாகவும் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்டு கடை அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.