கோவில் திருவிழா குறித்து அமைதி பேச்சுவார்த்தை
நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் கோவில் திருவிழா குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கொத்தூர் கிராமம் கொண்டகிந்தனபள்ளி ஊராட்சியில் நடைபெற உள்ள சென்றாயசுவாமி கோவில் திருவிழா தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி தலைமை தாங்கினார்.
இதில் முரண்பாடான 3 விழாக்குழுவினர்களை வரவழைத்து இந்து அறநிலைத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் 3 விழாக்குழுவினர் அனைவரும் ஒருங்கிணைந்து விழா நடத்தவதாக ஒப்புக்கொண்டனர் மேலும் கோவில் திருவிழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது
கூட்டத்தில் தாசில்தார் குமார், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார், வருவாய் அலுவலர் அன்னலட்சுமி பொதுப்பணி துறையினர், சுகாதாரத்துறை, மின்வாரிய துறை நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.