தோகை விரித்து ஆடிய மயில்
சீர்காழி அருகே கூழையார் கடற்பகுதியில் தோகை விரித்து ஆடிய மயிலை ரசித்து சென்ற பொதுமக்கள்
மயிலாடுதுறை
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் மயில் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மயிலின் இனப்பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதி மற்றும் கடற்கரையோர பகுதியான கொடியம்பாளையம் முதல் திருமுல்லைவாசல் வரை உள்ள சவுக்கு மரக்காடுகள் உள்ளது. இந்த பகுதியில் அதிக அளவில் மயில் தங்களது வாழ்விடமாக அமைத்து வாழ்ந்து வருகிறது. இப்பகுதியில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் கார்மேகம் சூழ்ந்து வந்த நிலையில் குளிர்ச்சியான காற்று நிலவியது. அப்போது சீர்காழி அருகே கூழையாறு கடல் பகுதியில் ஆண் மயில் தனது தோகையை விரித்து அழகிய நடனம் ஆடியது. இதனை அப்பகுதி கடல் அழகை ரசிக்க வந்த பொதுமக்கள் அனைவரும் மயில் ஆடிய நடனத்தை நின்றபடி ரசித்து சென்றனர்.
Related Tags :
Next Story