முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

சு பில்ராம்பட்டு முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே சு.பில்ராம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 22-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், தன பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், மாலையில் மங்களஇசை, கலசபூஜை மற்றும் யாகவேள்வி பூஜைகளும் நடைபெற்றன. நேற்று முன்தினம் மகா பூர்ணாஹூதி, தீபாராதனை மற்றும் வேள்வி பூஜை, கலச பூஜை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சு.பில்ராம்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், 8 மணிக்கு மேல் முத்துமாரியம்மன் வீதிஉலாவும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னின்று செய்திருந்தனர்.


Next Story