சாலையில் மாடுகளை திரியவிடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சாலையில் மாடுகளை திரியவிடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகளை திரியவிடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகளை திரியவிடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்துக்கு இடையூறு

கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு பல்வேறு விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே மாநகராட்சி பகுதியில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரியும் கால்நடைகளை முறையாக பராமரிக்காமல் சாலைகளில் திரியவிடும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு மாடு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும், கன்று ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்க மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வீடுகளில் பராமரிக்க...

எனவே கால்நடை உரிமையாளர்கள் தங்களுடைய கால்நடைகளை போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரியவிடாமல் வீடுகளில் வைத்து பராமரிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story