டீக்கடையில் விற்கப்பட்ட வடையில் 'ஈ'; உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்


டீக்கடையில் விற்கப்பட்ட வடையில் ஈ; உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்
x

திண்டுக்கல்லில் டீக்கடையில் விற்கப்பட்ட வடையில் ‘ஈ’ கிடந்ததால் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் டீக்கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு இன்று காலையில் ஒருவர் வந்தார். பின்னர் அங்கு விற்கப்பட்ட வடையை வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது வடைக்குள் 'ஈ' இருப்பதை பார்த்து அதிரிச்சியடைந்தார். உடனே அதை டீக்கடைக்காரரிடம் காண்பித்து கேட்ட போது அவர் முறையாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம், அவர் இதுகுறித்து புகார் கொடுத்தார். அதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செல்வம் தலைமையில் அலுவலர்கள் டீக்கடைக்கு வந்து ஆய்வு செய்தனர்.

அப்போது வடையில் 'ஈ' கிடந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் தரமற்ற எண்ணை மூலம் வடை தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு தயாரிக்கப்பட்ட வடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் டீக்கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.


Related Tags :
Next Story