ஏர்ஹாரன் பயன்படுத்திய வாகனங்களுக்கு அபராதம்


ஏர்ஹாரன் பயன்படுத்திய வாகனங்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஏர்ஹாரன் பயன்படுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி அருகே கல்லூரணி, ஆலடிபட்டி பகுதியில் உள்ள கல்குவாரிகளில் கற்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிக் கொண்டு கனரக வாகனங்கள் அதிவேகமாகவும், சாலை விதிகளை பின்பற்றாமலும் வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அருப்புக்கோட்டை போக்குவரத்து ஆய்வாளர் கண்ணன், திருச்சுழி போலீசார் பூமிநாதர் கோவில் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரனை பயன்படுத்திய 3 லாரிகளை பிடித்து ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தனர். வாகனங்களில் லைசன்ஸ் இல்லாமல் வந்த 3 பேருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று தொடர்ந்து சோதனை செய்து அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story