பெரும்பாறை அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய 3 பேருக்கு அபராதம்


பெரும்பாறை அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய 3 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 13 Jun 2023 7:29 PM IST (Updated: 14 Jun 2023 12:00 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

பெரும்பாறை அருகே உள்ள சோலைக்காடு, நேர்மலை, மஞ்சள்பரப்பு, வெள்ளரிக்கரை, கட்டக்காடு, புல்லாவெளி, நரசிங்கபுரம் பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி வன பாதுகாவலர் சீனிவாசன் உத்தரவுப்படி, கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர் அறிவழகன் மற்றும் வன பாதுகாப்பு படையினர் குழு அமைத்து அங்கு ரோந்து சென்றனர்.

அப்போது ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் கம்பி வலை அமைத்து காட்டுப்பன்றி வேட்டையாடியது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு இருந்த 3 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் நரசிங்கபுரத்தை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 33), சித்தரேவு கிராமத்தை சேர்ந்த சோலைராஜ் (37), முத்துராஜ் (21) என்று தெரியவந்தது. இவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடியதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து மஞ்சுநாத்துக்கு ரூ.50 ஆயிரம், சோலைராஜ், முத்துராஜ் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இனிவருங்காலத்தில் வனவிலங்குகளை வேட்டையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story