மிளாவை வேட்டையாடிய 5 பேருக்கு அபராதம்
மிளாவை வேட்டையாடிய 5 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடையநல்லூர்:
அச்சன்புதூர் அருகே மேக்கரை கிராமத்தில் மிளாவை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக தென்காசி மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில், வன ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் கடையநல்லூர் மற்றும் மேக்கரை பிரிவு வனவர்கள் முருகேசன், அம்பலவாணன், பண்பொழி பீட் வனகாப்பாளர்கள் முத்துச்சாமி, ராஜா, ரத்தினம், பால்ராஜ் ஆகியோரை கொண்ட வனத்துறை அலுவலர்கள் சென்றனர்.
அப்போது, மேக்கரை பகுதியில் ஓடி வந்த மிளாவை வேட்டையாடி அதை பங்கு போட்டுக் கொண்டு இருந்த பண்பொழியைச் சேர்ந்த ஆறுமுகம் சாமி (வயது 21), காளியப்பன் (35), மேக்கரை கிராமத்தைச் சேர்ந்த யாசர்தீன் (20), முகம்மது சாஜீர் (20), முகம்மது இஜாஸ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து 5 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.