பம்பர் பொருத்தப்பட்டிருந்த 5 வாகனங்களுக்கு அபராதம்


பம்பர் பொருத்தப்பட்டிருந்த 5 வாகனங்களுக்கு அபராதம்
x

சிவகாசியில் பம்பர் பொருத்தப்பட்டிருந்த 5 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

தமிழக அரசு கார்களில் பம்பர் பொருத்த தடை விதித்துள்ளது. இந்த நிலையில் சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல், வாகன ஆய்வாளர் கார்த்திகேயன் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 5 வாகனங்களில் பம்பர் பொருத்தப்பட்டு இருந்தது. இதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடனே அகற்றினர். இந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பதிவு எண்கள் இல்லாமல் வந்த வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் திடீர் ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story