புகையிலை பொருட்கள் விற்ற 7 கடைகளுக்கு அபராதம்
சங்கராபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 7 கடைகளுக்கு அபராதம் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.ராஜா உத்தரவின்பேரில் புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் மேற்பார்வையில் சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ், பொன்னுசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாலமுருகன், பாலசேகர், பாசில், குணதீபன்(பயிற்சி) ஆகியோரை கொண்ட குழுவினர் தியாகராஜபுரம் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து 300 அடி தூரத்துக்குள் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினர். தொடர்ந்து எஸ்.வி. பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 பெட்டிக்கடைகளின் உரிமையாளர்களக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.