அதிக பாரம் ஏற்றி வந்த 9 லாரிகளுக்கு அபராதம்


அதிக பாரம் ஏற்றி வந்த 9 லாரிகளுக்கு அபராதம்
x

கயத்தாறில் அதிக பாரம் ஏற்றி வந்த 9 லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டனிதீலீப், ஆறுமுகம், மாரியப்பன், காசிலிங்கம் ஆகியோர் கயத்தாறில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த 9 லாரிகளில் அளவுக்கு அதிகமாக பல்வேறு கனிம வளங்களை ஏற்றி வந்தது தெரியவந்தது. பின்னர் அந்த லாரிகளை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக ரூ.33 ஆயிரம் வரை அபராதம் விதித்து டிரைவர்களை எச்சரித்து அனுப்பினர்.


Next Story