ஏற்காட்டில் 3 பஸ்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
ஏற்காட்டில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்திய அரசு பஸ் உள்பட 3 பஸ்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம்
ஏற்காடு:
ஏற்காட்டில் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது ஒரு அரசு பஸ், 2 தனியார் பஸ்களில்அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டு, 3 பஸ்களுக்கும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் உரிய ஆவணங்கள் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஏற்காட்டில் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார் எச்சரிக்கை விடுத்தார்.
Next Story