துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடியவருக்கு அபராதம்


துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடியவருக்கு அபராதம்
x

கொடைக்கானல் அருகே துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை, கடல்கொடை பகுதியில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வனச்சரகர் சிவக்குமார், வனவர் அழகுராஜா மற்றும் வனத்துறை ஊழியர்கள் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் தோட்டத்தில் துப்பாக்கியால் ஒருவர், பறவைகளை சுட்டு வேட்டையாடி கொண்டிருந்தார். இதனைக்கண்ட வனத்துறையினர், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரகுராம் (வயது 40) என்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து துப்பாக்கியையும், வேட்டையாடப்பட்ட பறவைகளையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், துப்பாக்கிக்கு லைசென்ஸ் உள்ளதா? அவ்வாறு இருப்பின் அது யார் பெயரில் உள்ளது என்பது குறித்து விசாரித்தனர். அதில், வேட்டைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி ரகுராமனின் உறவினரான அந்தோணி குரூஸ் என்பவருக்கு சொந்தமானது என்றும். அவர் ஊரில் இல்லாத சமயத்தில் ரகுராமன் துப்பாக்கியை எடுத்து வந்து வேட்டையாடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரகுராமனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story