போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்


போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கமுதி அருகே போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி தேவர் கல்லூரி அருகே பரமக்குடி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மபிரியா ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்து விதிமுறையை மீறிய தனியார் பஸ்சுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினார். மேலும் கோட்டைமேடு, கமுதி, அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் முறையான ஆவணங்கள் இன்றி இயங்கிய ஆட்டோக்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தார். இதை தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறும் பஸ், ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.


Related Tags :
Next Story