அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்
அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு ரூ.1.79 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி மற்றும் பத்தமடை பகுதிகளில் நள்ளிரவில் விதிமுறைகளை மீறி, அதிக அளவு கல் லோடு ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரிகள் செல்வதாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிஷப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-கலெக்டர் ரிஷப் மற்றும் பத்தமடை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.46 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் சேரன்மாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன் சேரன்மாதேவி பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து ரூ.33 ஆயிரம் அபராதம் விதித்தார்.
Related Tags :
Next Story