புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்


புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடலூர்

கம்மாபுரம்,

கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள வீணங்கேணி, மேட்டுக்குப்பம் ஆர்ச், சீராங்குப்பம், கோட்டகம் ஆகிய பகுதிகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாண்டியராஜூ தலைமையில் புகையிலை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும், புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு புகையிலை தடுப்பு சட்ட விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் கடைகளில் அயோடின் கலந்த உப்பு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு நலக்கல்வி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன், கலியபெருமாள், ரஞ்சித்குமார் மற்றும் அர்ணால்டு ஜான்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story