சாலையில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்


சாலையில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 28 July 2023 1:30 AM IST (Updated: 28 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க, 5 துறைகளை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தனிப்படையினர் வாரந்தோறும் நகரில் சோதனை நடத்துகின்றனர். அப்போது சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி நேற்று மாநகராட்சி நகர்நல அலுவலர் செபாஸ்டியன் தலைமையிலான தனிப்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரவுண்டுரோடு அருகே போலீஸ் குடியிருப்பு வளாகம், அண்ணாநகரில் சுற்றித்திரிந்த 2 மாடுகள் பிடிபட்டன. இந்த மாடுகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி, மலைக்கோட்டை அருகே உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மாடுகளின் உரிமையாளர்களை வரவழைத்து அபராதம் விதித்தனர்.


Next Story