அனுமதியின்றி யானை வளர்த்தவருக்கு அபராதம்


அனுமதியின்றி யானை வளர்த்தவருக்கு  அபராதம்
x
தினத்தந்தி 28 May 2022 9:22 PM IST (Updated: 28 May 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே அனுமதியின்றி யானை வளர்த்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தென்காசி

கடையம்:

கடையத்தை அடுத்த பொட்டல்புதூர் அருகே சிலர் அனுமதியின்றி யானை வைத்திருப்பதாக கடையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் கேரளாவில் இருந்து அந்த யானையை இனாமாக பெற்று வந்தது தெரியவந்தது. மேலும் அதற்குரிய அனுமதி இல்லாமல் வளர்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின்படி அந்த யானையை வைத்திருந்த பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த பீர்முகமது, பக்கர் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story