புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு அபராதம்
கீழப்பாவூரில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் உத்தரவின்பேரில், கீழப்பாவூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆலோசனையின் படி கீழப்பாவூர் மற்றும் குறும்பலாபேரி பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள கடைகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீமூலநாதன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், கணேசன், அருண்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் புகையிலை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பள்ளிக்கூடம் வளாகம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஒரு கடைக்கு அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story