மணிமுத்தாறு வனப்பகுதியில் இருந்து மரத்துண்டு கடத்தியவருக்கு அபராதம்


மணிமுத்தாறு வனப்பகுதியில் இருந்து மரத்துண்டு கடத்தியவருக்கு அபராதம்
x

மணிமுத்தாறு வனப்பகுதியில் இருந்து மரத்துண்டு கடத்தியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் மணிமுத்தாறு அருவி மற்றும் தேயிலைத்தோட்ட பகுதிகளான மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து உள்ளது. இப்பகுதிகளில் அனுமதி பெறாமல் யாரும் உள்ளே செல்ல முடியாது. அதற்காக மணிமுத்தாறில் வன சோதனை சாவடி உள்ளது. மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் வாகனங்களை இந்த சோதனை சாவடிகளில் வனத்துறையினர் சோதனை செய்து அனுப்புவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வனத்துறை அமைதியுடன் ஊத்து தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த சுபாஷ் என்பவர் வீடு காலி செய்து வேறு பகுதிக்கு செல்வதால் அவருடைய வீட்டிற்குரிய பொருட்களை ஏற்றி லாரி ஒன்று வந்தது. அதை வனத்துறையினர் சோதனை செய்தபோது செங்குறிச்சி மரத்துண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் உத்தரவின் பேரில் அனுமதி இல்லாமல் மரத் துண்டுகளை ஏற்றி வந்த சுபாஷ்க்கு ரூ.80 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு மரத்துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story