புகையிலை பொருட்கள் விற்றகடை உரிமையாளர்களுக்கு அபராதம்
சின்னசேலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர்களுக்கு அபராதம் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை
சின்னசேலம்
சின்னசேலம் பகுதியில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன் மேற்பார்வையில், சுகாதார மேற்பார்வையாளர் சார்லஸ்விக்டர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மாயக்கண்ணன், அசலாம்பாள், கவுதம், செல்வராஜ் ஆகியோரை கொண்ட குழுவினர் நேற்று சின்னசேலம், கனியாமூர், எலியத்தூர், தொட்டியம், கச்சிராயப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சின்னசேலம், எலியத்தூர், தொட்டியம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை கண்டறிந்த அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் வழங்கப்பட மாட்டாது, புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது என விழிப்புணர்வு பலகை வைக்க வேண்டும் என எச்சரித்தனர். கனியாமூரில் உள்ள ஒரு பேக்கரி கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசியதை அடுத்து சுற்றுச்சூழல் மாசடைய செய்ததாக அந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.