நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும்
நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என அமைச்சா் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என அமைச்சா் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
கண்காணிப்பு குழு கூட்டம்
விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், திட்ட இயக்குனர் திலகவதி, அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
இக்கூட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்ட பணிகள் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டு நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.
ரெயில்வே பிரச்சினை
மேலும் மேற்கண்ட திட்டங்களில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதி வராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டகளுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்களை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நமது மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை செய்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
ராஜபாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மற்றும் நாராயணன் வெளிநாட்டில் வேலை செய்த போது இறந்து விட்டதால் அவர்களுக்கு தர வேண்டிய இழப்பீடு தொகையினை அவர்கள் சட்டபூர்வ வாரிசுகளிடம் அமைச்சர் வழங்கினார். கூட்டத்தில் மதுரை கோட்ட ெரயில்வே மேலாளர் அனந்து கலந்து கொண்டார். ெரயில்வே தொடர்பான பிரச்சினைகளுக்கு கோட்ட மேலாளரை அணுகலாம் என அமைச்சர் தெரிவித்தார்.