பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்சங்கத்தினர் தர்ணா போராட்டம்


பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x

நெல்லையில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்தில் நேற்று அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சம்மனசு தலைமை தாங்கினார். மாவட்ட ஆலோசகர் ஆவுடைநாயகம், துணை தலைவர் நயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் பாலன் சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 1.1.2017 முதல் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 7-வது சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் பரமசிவன் விளக்கி பேசினார். இந்த போராட்டத்தில் நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story