ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்


ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் அகில இந்திய ஓய்வூதியர்கள் தினத்தை முன்னிட்டு ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது. சங்க கிளை தலைவர் அருமைராஜ் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சங்கச் செயலாளர் தங்கவேலு 2022-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் முருகையா வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.

கூட்டத்தில், மகளிரணி தலைவர் பட்டம்மாள், எழுத்தாளர் உதயசங்கர், சேதுராமன், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஓய்வூதிய விதிகளை முறைப்படுத்தி வருமான வரி செலுத்துவதில் இருந்து ஓய்வூதியர்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலை நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ெரயில்வே சார்பில் கொடுக்கப்படும் இலவச பயண அட்டையை பயன்படுத்தும் காலவரையை 5 மாதத்தில் இருந்து 6 மாதமாக நீட்டிக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ெரயில் பயணங்களில் அளித்து வந்த வசதிகளையும், சலுகைகளையும் மீட்டமைக்க ெரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story