ஓய்வூதியர் தின விழா


ஓய்வூதியர் தின விழா
x

பாளையங்கோட்டையில் ஓய்வூதியர் தின விழா நடந்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் தமிழ்நாடு மின்சார ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் அசோசியேஷன் சார்பில், 13-ம் ஆண்டு ஓய்வூதியர் தினம் மற்றும் குடும்ப விழா நடந்தது. கிளை தலைவர் கண்ணையா தலைமை தாங்கினார். செயல் தலைவர் சண்முகம் வரவேற்று பேசினார். மாநில தலைவர் சுடலை, துணைத்தலைவர் முத்தையா, அஞ்சல் ஓய்வூதியர் சங்க செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் சவுந்தர்ராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதியோர் மருத்துவம் குறித்து பேசினார். செயலாளர் சிவசுப்பு பாண்டியன் அறிக்கை வாசித்தார். மீனாட்சி சுந்தரம் தீர்மானங்கள் பற்றி விளக்கி கூறினார். மாநில துணைத்தலைவர் மதுரை ராசாங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story