ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்-நாளைக்குள் மனு அளிக்க வேண்டுகோள்


ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்-நாளைக்குள் மனு அளிக்க வேண்டுகோள்
x

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளைக்குள் மனு அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, ஓய்வூதியர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் 2 பிரதிகளுடன் விண்ணப்பித்து, குறை தீர்க்கும் கூட்டத்திலும் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story