போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதி


போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதி
x

திருச்சியில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

திருச்சி

திருச்சி மாநகரில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளியூரில் மற்றும் வெளி மாவட்ட, மாநில பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநகரில் உள்ள முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை சரிசெய்ய போக்குவரத்து போலீசார் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இருந்த போதிலும் சில இடங்களில் இன்னும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.

இதில் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு உள்ள சாலை கரடுமுரடாக காணப்பட்டது. தற்போது அந்த சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானவில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரையும் மற்றும் ஹீபர் ரோடு, மேஜர் சரவணன் சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த சாலையில் அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் தட்டு தடுமாறி செல்கிறது. இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் இருந்த போதிலும் போக்குவரத்தை சீரமைக்க சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலை சீரமைப்பு பணி முடியும் வரை போக்குவரத்து நெரிசலை தடுக்க மாற்றுஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

...................

3 காலம் படம் பிட்


Next Story