ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்: பொதுப்பணித்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்:  பொதுப்பணித்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி பொதுப்பணித்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

கடலூர்


ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள அம்புஜவல்லிப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வாய்க்காலை ஆக்கிரமித்து தனிநபர்கள் சிலர் வீடு மற்றும் கடைகளை கட்டி இருந்தனர்.

இந்த நிலையில் பொதுப்பணித்துறையினர், இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இருப்பதாக கூறி நோட்டீசு அளித்தனர். அதன்படி கடந்த 25-ந்தேதி பொக்லைன் எந்திரத்துடன் அதிகாரிகள் அங்கு வந்தனர்.

அப்போது, அங்கு வீடு கட்டிருந்த 4 குடும்பத்தினர் அவர்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். ஆனால், அன்றைய தினம் அங்கிருந்த 3 பேரின் கடைகள் மட்டும் அகற்றப்படவில்லை.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பொதுபணித்துறையினர் பாரபட்சம் காட்டுவதாக கூறி, அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஸ்ரீமுஷ்ணம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திடனர். அதில், வருகிற 7-ந்தேதிக்குள் அங்குள்ள கடைகளை அவர்களாகவே அகற்றிக்கொள்ளவில்லை என்றால், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story