போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்
ஏலச்சீட்டில் பணம் மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை கோரி சாயல்குடி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம்
சாயல்குடி,
சாயல்குடி போலீஸ் நிலையத்தை நேற்று 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம். இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். திடீரென 6 மாதத்திற்கு முன்பு தலைமறைவாகி விட்டார். ஏலச்சீட்டு பணம் கட்டிய 217 நபர்களுக்கு ரூ.8½ கோடி ரூபாய் தரவேண்டிய உள்ளது. இது குறித்து 6 மாத காலமாக ராமநாதபுரம் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுத்து அலைந்து வந்தோம்.
எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்காததால் சாயல்குடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதாக தெரிவித்தனர். தங்களை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story