ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை


ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
x

ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அரியலூர்

தாமரைக்குளம்:

ரேஷன் கடையை முற்றுகை

அரியலூர் நகராட்சியின் 15-வது வார்டில் கீழத் தெருவில் ஒரு ரேஷன் கடை உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கடையில் 1,414 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. அரியலூர் நகரிலேயே அதிக ரேஷன் அட்டைகள் கொண்டதாக இந்த கடை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ரேஷன் கடை செயல்படும் கட்டிடத்தில் மழைக்காலங்களில் நீர் கசிவதாக கூறி, இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

நேற்று அந்த கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களுக்கு, அந்த கடை இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரியவந்ததையடுத்து, கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை

அப்போது அவர்கள் கூறுகையில், ஏற்கனவே பல்வேறு தெருக்களில் இருந்து இங்கு வருவதற்கே பொதுமக்கள் மிகவும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இங்கிருந்து கடையை அதிக தொலைவிற்கு மாற்றினால் வயதானவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். எனவே அந்த கடை இங்கேயே செயல்படச்செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story