மண்சரிவு ஏற்பட்டுள்ள சாலையை உதவி கலெக்டர் ஆய்வு


மண்சரிவு ஏற்பட்டுள்ள சாலையை உதவி கலெக்டர் ஆய்வு
x

விவசாய கிணற்றின் அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ள சாலையை உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தை அடுத்த இச்சிப்புத்தூர் பகுதியில் தண்டலத்திலிருந்து குருவராஜபேட்டை செல்லும் சாலையின் ஓரமாக ஆபத்தான நிலையில் உள்ள கிணற்று பகுதியில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக புதிதாக வருபவர்களும், இரவு நேரங்களில் வருபவர்களுக்கும் அந்த இடத்தில் கிணறு இருப்பது தெரிவதில்லை. இதனால் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படக்கூடும். எனவே, இதனை தவிர்க்கும் வகையில் அந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் மண் சரிவை சரி செய்து சாலை ஓரமாக உள்ள கிணற்று பகுதியில் தடுப்பு சுவர் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனையடுத்து உதவி கலெக்டர் பாத்திமா, அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் சாலையை சீரமைக்கவும், அதற்கு முன்பு மாற்றுப்பாதை ஏற்படுத்தவும் நிலத்தின் உரிமையாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் உதவிகலெக்டர் பாத்திமா அறிவுறுத்தினார்.


Next Story