பாதையை மறிப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்


பாதையை மறிப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்
x

தனிநபர் வீடு விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதையை மறிப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

விரிவுபடுத்தும் பணி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேடு அருகே உள்ள வடக்கலூர் காலனி தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் இளையராஜா(வயது 30). இவர் தனதுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டின் பக்கத்தில் உள்ள காலி இடத்தின் வழியாக இவரது வீட்டின் பின் பகுதியில் வசிக்கும் சுமார் 8 குடும்பத்தினர் தங்களது வீட்டிற்கு சென்றுவர பொதுபாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இளையராஜா வசிக்கும் வீடு அவருக்கு போதிய அளவில் இல்லை என்பதால் வீட்டை விரிவு படுத்துவதற்காக பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

வீட்டை விரிவு படுத்தினால் நாங்கள் எங்களது வீட்டிற்கு சென்ற வர பாதை வசதி கிடைக்காது எனக்கூடிற மேற்கண்ட 8 குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்து வடக்கலூர்-வேப்பூர் சாலையில் நேற்று திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story