அரசு பஸ் நின்று செல்ல வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்
மேல்மலையனூர் அருகே அரசு பஸ் நின்று செல்ல வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்
செஞ்சி,
மேல்மலையனூர் அருகே அன்னமங்கலம் கிராமம் உள்ளது. இங்குள்ள கூட்டு சாலையில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் நின்று செல்கின்றன. ஆனால் விழுப்புரம்-வேலூர் செல்லும் அரசு பஸ் நிற்காமல் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் விழுப்புரம், வேலூருக்கு செல்ல பெரும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் விழுப்புரம்- வேலூர் செல்லும் அரசு பஸ்சை அன்னமங்கலம் கூட்டுரோட்டில் நின்று செல்ல வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த மக்கள் விழுப்புரம்- ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story