மின் நிறுத்தம் செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மின் நிறுத்தம் செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x

முன் அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட மின்சாரம் இரவு 7 மணிவரைக்கும் வராததால், கலவை மின்சார வாரிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

முன் அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட மின்சாரம் இரவு 7 மணிவரைக்கும் வராததால், கலவை மின்சார வாரிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின்நிறுத்தம்

கலவையை அடுத்த வளையாத்தூர் பகுதியில் நேற்று முன் அறிவிப்பின்றி மின்நிறுத்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அகரம், மேல்நேத்தப்பாக்கம், டீ புதூர், கணியனூர், போன்ற கிராமங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மின் சாரம் வரவில்லை.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் அகரம் கிராம பொதுமக்கள், கலவை மின்சார அலுவலகத்திற்கு சென்று மின் சப்ளை வழங்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு மின்சார ஊழியர்கள் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென மின்சார அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அகரம் கலவை கிராம நிர்வாக அதிகாரிகள் ராணி, தீனா தயாளன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து ஆற்காடு செயற்பொறியாளர் உத்தரவின் பேரில் இரவு 7.30 மணி அளவில் மின் சப்ளை வழங்கப்பட்டது.

Next Story