மக்கள் நீதிமன்றத்தை அணுகி உரிய தீர்வு காணலாம்


மக்கள் நீதிமன்றத்தை அணுகி உரிய தீர்வு காணலாம்
x

எந்தவொரு பிரச்சினைக்கும் மக்கள் நீதிமன்றத்தை அணுகி உரிய தீர்வு காணலாம் என நீதிபதி இருதய ராணி கூறினார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

எந்தவொரு பிரச்சினைக்கும் மக்கள் நீதிமன்றத்தை அணுகி உரிய தீர்வு காணலாம் என நீதிபதி இருதய ராணி கூறினார்.

சான்றிதழ் வழங்கும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா துணைத்தலைவர் சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், மாணவர் நலத்துறை இயக்குனர் சாம்சன் நேசராஜ் கலந்து கொண்டு சான்றிதழ்களை 324 மாணவர்களுக்கு வழங்கினர். துறை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்பிரதேஷ், சுந்தராஜன், சுரேஷ்குமார், பிரியா, ஷேக் அஷ்ரப் இந்துஜா, மாரிசெல்வம், லயாலா ஜாஸ்மின் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடு செய்திருந்தனர். முடிவில் பெருமாள் நன்றி கூறினார்.

விழிப்புணர்வு முகாம்

இதைத்தொடர்ந்து கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் சட்ட கல்லூரி மற்றும், விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு சட்டப்பணிகள் நீதிமன்ற நீதிபதி இருதய ராணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவா் கூறியதாவது:-

பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடி கொள்ளலாம். மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளித்து உடனடி தீர்வு காணலாம். நேரத்தை வீணாக்காமல் மக்கள் நீதிமன்றத்தை அணுகி பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற மக்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மாணவர்கள் செய்திருந்தனர். இதில் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story