தஞ்சை சுற்றுலா தலங்களில் களை கட்டிய காணும் பொங்கல்
தஞ்சையில் உள்ள சுற்றுலா தலங்களில் காணும் பொங்கல் களை கட்டியது. பெரியகோவில், மணிமண்டபம் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது
தஞ்சாவூர்;
தஞ்சையில் உள்ள சுற்றுலா தலங்களில் காணும் பொங்கல் களை கட்டியது. பெரியகோவில், மணிமண்டபம் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது
களை கட்டிய காணும் பொங்கல்
பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் காணும் பொங்கலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நல்லநாளில் உறவினர்கள், நண்பர்களைக் காணுதல், பெரியோர்களிடம் ஆசி பெறுதல், சுற்றுலா செல்லுதல் போன்றவை வழக்கமாக இருந்துவருகிறது.இதையொட்டி, தஞ்சாவூர் பெரியகோயில், அரண்மனை, பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அருங்காட்சியகம், மணிமண்டபம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டத்தால் காணும் பொங்கல் களைகட்டியது.
போக்குவரத்து நெரிசல்
ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக வந்து விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் வீட்டிலிருந்து சாப்பாடு கட்டி கொண்டு வந்து உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். வெளியூர்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். இதன் காரணமாக பெரியகோவில், மணிமண்டபம் போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறமால் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.