நடைபாலத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்- கிராம மக்கள்


நடைபாலத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்- கிராம மக்கள்
x

கூத்தாநல்லூர் அருகே நடைபாலத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே நடைபாலத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடைபாலம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் உச்சுவாடி நேதாஜி தெரு சாலை பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக வெள்ளையாற்றின் குறுக்கே நடைபாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை உச்சுவாடி இரட்டை தெரு, ஒற்றை தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, தாமரைக்குளம் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, நேதாஜி தெரு, தெற்குதெரு, வடக்கு தெரு, பெரியகொத்தூர், மன்னஞ்சி, வடபாதிமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் உச்சுவாடி நடைபாலத்தின் முகப்பில் உள்ள தடுப்புச் சுவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து ஆற்றில் விழுந்தது. அதன்பிறகு அங்கு தடுப்புச்சுவர் மீண்டும் கட்டப்படவில்லை. அதற்கு பதிலாக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த மணல் மூட்டைகள் சரிந்து விழுந்து இருப்பதால், பாலத்தின் முகப்பு பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் அச்சம்

ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் நடைபாலம் சரிந்து விழுந்து விடுமோ? என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நடைபாலத்தின் முகப்பு பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story