திருவெண்காடு-சின்னப்பெருந்தோட்டம் சாலை சீரமைக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருவெண்காடு- சின்னப்பெருந்தோட்டம் சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திருவெண்காடு- சின்னப்பெருந்தோட்டம் சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
குண்டும், குழியுமான சாலை
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சின்னப்பெருந்தோட்டம் கிராமம் உள்ளது. திருவெண்காட்டில் இருந்து சின்னப் பெருந்தோட்டம் கிராமத்திற்கு செல்ல அம்பேத்கர் நகர் வழியாக தார்ச்சாலை உள்ளது. சின்னப் பெருந்தோட்டம் மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
சின்னப் பெருந்தோட்டத்தில் அரசு பள்ளி உள்ளது. இதனால் திருவெண்காடு- சின்னப்பெருந்தோட்டம் இடையேயான சாலை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது.
சீரமைக்க வேண்டும்
தற்போது இந்த தார்ச்சாலை குண்டும், குழியுமாக மோசமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக இந்த சாலையின் வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், 'திருவெண்காடு- சின்னப் பெருந்தோட்டம் சாலை மோசமாக உள்ளதால் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்' என்றனர்.